ஏவுகணையின் தந்தை ,அறிவியல் ஆசான், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்றெல்லாம் போற்றப்படுகின்ற டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் 27.07.2022 (புதன்கிழமை) இன்று ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. கலாம் ஐயா அவர்களின் சிந்தனைகளை மாணவிகளின் மனதில் விதைக்கும் விதமாக அவரின் சிந்தனைகளை முன் வைத்து கவிதை ,ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 125 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.